கமல்ஹாசன் படத்தில் நடிகையா இது?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் கமலுடன் இணைந்து ஜோதிகா, கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் கமலின் பிளாஷ் பேக் காட்சியில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை கமலினி முகர்ஜி. சில காட்சிகள் தான் நடித்திருப்பார் இருப்பினும் அந்த சில காட்சிகளினாலே இவர் படுபிரபலமானார். இந்த படத்திற்கு பின்னர் இவருக்கு பெரிதாக தமிழில் வாய்ப்பில்லாமல் போனது. பல காலங்களுக்கு பின்னர் தமிழில் வெளிவந்த இறைவி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த புலிமுருகன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காத நடிகை கமலினி முகர்ஜியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள நடிகை கமலினி முகர்ஜியின் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Related Posts