சீதுவ பிரதேசத்தில் பெண் ஒருவரை கொலை செய்த சந்தேகநபர் அதிகளவு வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்ட நிலையில், பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மடங்வல, பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பலாங்கொடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையில் பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவத்தில் 27 வயதுடைய 2 பிள்ளைகளின் தாய் கடந்த 14 ஆம் திகதி ரத்தொலுவ, முத்துவடியா வீதியிலுள்ள தங்கும் அறை ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
அநுராதபுரம் – பாமுகொல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான திலினி சசிகலா பிரியபாஷினி என்ற பெண்ணே படுகொலை செய்யப்பட்டவர் ஆவார்.
22 வயதுடைய இளைஞனுடன் சில காலமாக தொடர்பு இருந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், குறித்த இளைஞனே இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சீதுவில் உயிரிழந்த பெண் தங்கியிருந்த அறைக்கு குறித்த இளைஞன் பல தடவைகள் சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலையின் பின்னர் சந்தேக நபர் தற்கொலைக்கு தயாராகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொலைச் சம்பவம் இடம்பெற்ற 13 ஆம் திகதி இரவு இந்த அறையில் இருந்த சந்தேக நபர் மறுநாள் காலை அறையை விட்டு வெளியேறியதை விடுதியின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.
கொலையின் பின்னர், சந்தேகநபர் தொலைபேசியில் தனது நண்பரிடம் முழு சம்பவத்தையும் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (P)