சீனாவில் கடந்த வாரம் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தையைக்கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். ஏனெனில், பிறந்த குழந்தைக்கு 10 செ.மீ நீளத்தில் வால் இருந்துள்ளது. இதுகுறித்து கூறிய மருத்துவர்கள், தண்டுவடத்தில் குறைபாடுடன் கூடிய நரம்பியல் கோளாறால்தான் இந்த வால் ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்தனர்.
குழந்தைக்கு உள்ள வால் நரம்பு மண்டலத்துடன் இணைந்திருப்பதால் அதனை நீக்க முடியாது என்றும், அத்துடன் இந்த வாலில் எந்தவித அசைவும் இருக்காது என்றும், அதனை நீக்கினால் குழந்தைக்கு ஆபத்து என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மிக அரியவகை நோயாக இது அறியப்படுகிறது. இதற்கு முன்பு கயானா நாட்டில், கடந்த வருடம் ஜூன் மாதம் பிறந்த ஒரு குழந்தைக்கு வால் இருந்துள்ளது. பிறந்து 10 நாட்களே ஆன அந்தக் குழந்தையின் வாலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.