கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் அறுவரினதும் இறுதிக் கிரியைகள் நேற்று நடந்தது.
ஞாற்றுக்கிழமை மதியம் ஒரு மணிக்கு ஒட்டாவாவில் உள்ள இன்ஃபினிட்டி கன்வென்ஷன் சென்டரில் முன்னெடுக்கப்பட்டது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளில் கனடிய அமைச்சர் கெரி ஆனந்த சங்கரி உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
கெரி ஆனந்த சங்கரி உள்ளிட்டவர்கள் இந்த இறுதிக் கிரியைகளில் இரங்கல் உரைகளை நிகழ்த்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹெவனின் பேரிகன் ட்ரைவ் பகுதியில் வசித்து வந்த தனுஷ்க விக்ரமசிங்க என்பவரின் வீட்டில் கடந்த 6ஆம் திகதி அவரது மனைவியான தர்ஷனி திலந்திகா ஏக்கநாயக்க (35), அவரின் பிள்ளைகளான இனூக்க (7 வயது மகன்), அஷ்வினி (4 வயது மகள்)ரூப, ரின்யானா (3 வயது மகள்), கெல்லி (2 மாத வயதான மகள்) மற்றும் இக்குடும்பத்தினருடன் தங்கியிருந்த காமினி அமரகோன் (40) ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 19வயதான பெப்ரியோ டி சொஸ்யா மீது 6 கொலைக் குற்றச்சாட்டுகள்ரூபவ் ஒரு கொலை முயற்சிக் குற்றச்சாட்டு ஆகியன சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவரை எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதோடு கனடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.