கர்நாடகாவின் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் குடகு மலைப் பகுதி அமைந்துள்ளது.
இயற்கை எழிலை ரசிக்க விரும்பும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடகு மலைப் பகுதியில் அமைந்துள்ள கிளப் மஹிந்திரா ரிசார்ட்ஸ்களுக்கு வருகின்றனர். புதிதாக வரும் சுற்றுலாப் பயணிகள் கூகுள் மேப் உதவியுடன் குடகுமலைப் பகுதியில் பயணம் மேற்கொள்கின்றனர்.
ஆனால் கூகுள்மேப்பின் தவறான தகவலால் அங்குள்ள குறிப்பிட்ட ஒரு கிராமத்துக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வழிதவறி செல்கின்றனர். நாள்தோறும் பலருக்கு சரியான வழி யைக் கூறி சோர்வடைந்த கிராம மக்கள், அங்குள்ள முக்கிய சாலைப் பகுதியில் விழிப்புணர்வு பேனரை வைத்துள்ளனர்.
அதில், கூகுள் தகவல் தவறானது. இந்த சாலை கிளப் மஹிந்திராவுக்கு செல்லும் வழியல்ல’’ என்று தெளிவாக எழுதி வைத்துள்ளனர். இந்த சாலையோர பேனர் புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் | Thedipaar News