வீடொன்றில் திருடப்பட்ட 1,40,000 ரூபாய் பெறுமதியான தங்க வளையல், 40 அடி உயர தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
பதுளை, மெதபத்தனை பகுதியில் வீடொன்றில் யாரும் இல்லாதபோது ஜன்னலை உடைத்து உள் புகுந்து தங்க வளையல் ஒன்றையும், 37,000 ரூபாய் பணத்தையும் திருடிச்சென்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றிக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 22 வயதுடைய இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளனர் .
அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது திருடப்பட்ட பணத்தை தான் செலவிட்டதாகவும் தங்க வளையலை , தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைத்துள்ளதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார் .
மேலும், இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர் . (P)