இலங்கையில் நிலவிக் கொண்டிருக்கும் காலநிலையில் மாற்றம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கடந்த சில நாட்களாக இலங்கையில் நிலவிக் கொண்டிருந்த வறட்சியான காலநிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

முக்கியமாக இலங்கையின் தென் அரைப்பகுதியில் (Southern half) நாளை முதல் இந்த காலநிலை மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் சிறிதளவான மழை காணப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும் நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான காலநிலையே நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

கடல் பிராந்தியங்களை பொறுத்தவரையில் திருகோணமலை முதல் மட்டக்களப்பு, பொத்துவில் ஊடான அம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் சிறிதளமான மழை காணப்படுவதுடன் ஏனைய கடல் பிராந்தயங்களில் சீரான காலநிலையே நிலவும். 

இலங்கைத்தீவை சுற்றியுள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 15km/h முதல் 25km/h வரையான வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்து காற்று வீசும்.

இந்த காற்றின் வேகமானது சில சந்தர்ப்பங்களில் புத்தளம் முதல் மன்னார் ஊடான காங்கேசன்துறை வரையான பிராந்தியம் மற்றும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு வரை 35km/h - 40km/h அதிகரித்து வீச கூடும். 

மேற்குறிப்பிடப்பட்ட இந்த கடல் பிராந்தியங்கள் சில சந்தர்ப்பங்களில் சற்று கொந்தளிப்பாகவும் காணப்படும். (P)


Related Posts