மகன் மீது சந்தேகம், DNA டெஸ்ட் எடுத்த பிரபலம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் சாக்கலேட் பாய் ஆக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். தமிழ் சினிமாவில் இவருக்கு என்று சில ரசிகர் கூட்டமே இருந்தது. குறிப்பாக பெண் ரசிகர்கள். சினிமாவில் வளர்ந்து கொண்டே வந்தவர் திடீரென சினிமாவை விட்டு மொத்தமாக ஒதுங்கிவிட்டார். தற்போது சினிமாவில் இருந்து மொத்தமாக விலகிவிட்டார்.வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நடிகர் அப்பாஸ் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகும். சமீபத்தில் தமிழ்நாடு வந்திருந்த அபாஸ் குறித்து இவர் மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவதாக தகவல் வெளிவந்தது. அப்போது அவர் கொடுத்த பேட்டிகள் கூட வைரலாகின. அந்த பேட்டியில் அவர் கூறிய சில விஷயங்கள் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளன. இந்த பேட்டியில், நடிகர் அப்பாஸ் இடம் அவரது மூத்த மகன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் கூறிய அபாஸ் அவர் ரொம்ப அமைதியான ஒருவர், அந்த வயதில் நான் ரொம்ப கூத்து கலாட்டா எல்லாம் பண்ணிட்டு இருந்தேன். ஆனால், என் மகன் Mature-ஆக இருக்கிறார். அதனால் என்னுடைய மகனா என சந்தேகம் இருந்தது. பிறகு DNA செக் பண்ணும்போது என் பையன் தான் என கூறினார்.

Related Posts