இலவசமாக தையல் மிஷின்பெற என்ன செய்ய வேண்டும்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ், மத்திய அரசு பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்குகிறது. தையல் மிஷின் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.15000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த இலவச தையல் மிஷின் திட்டத்திற்கு விண்ணப்பிக்க https://pmvishwakarma.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். 

தேவையான ஆவணங்கள் 

ஆதார் அட்டை   

வருமான சான்றிதழ் 

ஜாதி சான்றிதழ் 

வறுமை கோடு குடும்ப அட்டை 

வங்கி பாஸ்புக் 

பாஸ்போர்ட் அளவு கொண்ட புகைப்படம் 

தகுதி 

20 முதல் 40 வயதுடைய பெண்களாக வேண்டும். 

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாக இருக்க வேண்டும். 

இந்தியாவின் ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு வேண்டும்.

 தையல் பற்றிய அடிப்படை அறிவு வேண்டும். 

இது போன்ற இலவச திட்டத்தை வேறு எந்த அரசு திட்டத்திலிருந்தும் பெற்றிருக்க கூடாது. விண்ணப்பிக்கும் முறை: இலவச 

தையல் மிஷின் திட்டம் 2024க்கான விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்யவும். 

தேவையான விவரங்களை பூர்த்தி செய்துவிட்டு தேவையான ஆவணங்களை சேர்க்கவும். விண்ணப்பத்தை ஆன்லைனில் அல்லது அருகிலுள்ள அரசு அலுவலகம்/என்ஜிஓவில் சமர்ப்பிக்கவும். 

ஆன்லைன் விண்ணப்பங்களை விண்ணப்பித்த பின், உங்கள் விண்ணப்பம் சரி செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டீர்கள் என்றால், அதற்கான SMS உங்கள் மொபைல் போனுக்கு வந்து சேரும். அதன்பின், ஒப்புதல் கிடைத்த 15 நாட்களுக்குள் வங்கி கணக்கில் உதவித்தொகை வரவு வைக்கப்படும். இதன் மூலம் நீங்கள் தையில் மிஷினை வாங்க முடியும்.

Related Posts