வெலிகந்த பிரதேசத்தில் உள்ள அரிசி ஆலைக்கு கொண்டு செல்லப்பட்ட சுமார் பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான கீரி சம்பா லொறியை திருடிச் சென்ற சிலர், அந்த லொறியிலிருந்த கீரி சம்பா அரிசியை திருடி விட்டு நேற்று லொறியை மாத்திரம் விட்டுச்சென்றுள்ளனர்.
20ஆம் திகதி அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் லொறியை கைப்பற்றியதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த லொறியின் உரிமையாளர் 19 ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார். இந்த புகாரின்படி விசாரணையை பொலிஸார் தொடங்கியுள்ளார்கள்.
லொறியில் இருந்த 9100 கிலோ கீரி சம்பா அரிசியை சிங்கபுர பகுதியிலுள்ள அரிசி ஆலைக்கு கொண்டு செல்லும் போது வாகன நெரிசலால் அன்றைய தினம் ஆலைக்கு செல்ல முடியாமல் இருந்ததாகவும், அதனை உரிமையளரிடம் வாகன சாரதி தெரிவித்து உரிமையாளர் உத்தரவின் படி ஓரிடத்தில் லொறியை நிறுத்தி விட்டு சென்று மறுநாள் காலை சம்பவ இடத்தை பார்வையிடும் போது லொறியை காணவில்லை எனவும் வெலிகந்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் வெலிகந்த அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் நிலையப் பரிசோதகர் சமந்த ரத்நாயக்க உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உட்பட்ட குழு ஒன்று மேலதிக விசாரணைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். (P)
நாட்டை வந்தடைந்த புதிய நிறுவனத்தின் முதலாவது கப்பல் | Thedipaar News