கைநிறைய சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி என்பது அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியத் தபால் துறையின் வணிக பிரிவாகும்.அதில் காலியாக உள்ள எக்சிகியூட்டிவ் பதவிக்கு ஆள் சேர்க்கும் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 காலியிட விவரங்கள்: 

எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கு 47 காலியிடங்களை நிரப்ப நடத்தப்படுகிறது,

 21 காலியிடங்கள் - பொதுப் பிரிவினருக்கும், 

4 காலியிடங்கள் - EWS பிரிவினருக்கும், 

12 காலியிடங்கள் -  OBC பிரிவினருக்கும், 

ஏழு காலியிடங்கள் - Sc பிரிவினருக்கும் மற்றும் மூன்று காலியிடங்கள் எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

வயது வரம்பு: மார்ச் 1, 2024 இன் படி விண்ணப்பதாரர்கள் 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 

கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 சம்பளம்: தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் தோறும் தோராயமாக ரூ. 30,000. கிடைக்கும் 

தேர்வு செயல்முறை: பட்டப்படிப்பு மதிப்பெண்கள், குழு விவாதம் அல்லது தனிப்பட்ட நேர்காணல், ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். 

எப்படி விண்ணப்பிப்பது? ippbonline.com என்ற IPPB இன் அதிகாரபூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். முகப்புப்பக்கத்தில், career விருப்பத்தை கிளிக் செய்யவும். விண்ணப்பப் படிவத்தைப் பதிவு செய்து நிரப்பவும் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி சமர்ப்பிக்கவும்

 தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரர்கள் கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.

Related Posts