Font size:
Print
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று, தேமுதிக தஞ்சாவூர் மாநகர மாவட்டச் செயலாளர் இராமநாதன் அவர்கள், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் , தனது ஆதரவாளர்களுடன், தமிழக பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவரது வருகை, தமிழக பாஜகவுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி தேமுதிக வேட்பாளராக சிவநேசன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த அக்கட்சியின் மாநகர மாவட்டச் செயலாளர் மருத்துவர் ப.ராமநாதன் அதிருப்தியடைந்தார். இதையடுத்து அவர் பாஜகவில் இணைத்து கொண்டார்.
Related Posts