ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு விஜேராம வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் புதன்கிழமை கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தின் போதே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது நாமல் ராஜபக்ச அந்தப் பதவிக்கு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க செய்திளார்களிடம் கூறியுள்ளார்.
முன்னதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச செயற்பட்டிருந்தார்.
எனினும், கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற கட்சியின் தேசிய மாநாட்டின் பின்னர் பசில் ராஜபக்ஷ அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அன்று முதல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடமாக இருந்து வந்தது.
இந்தப் பின்னணியிலேயே, கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (P)
மட்டக்களப்பில் விபத்து | Thedipaar News