விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி பின்னர் சினிமாவிலும் துணை நடிகராகி வெற்றி கண்டவர் நடிகர் சேஷு. இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.இந்த நிலையில் நடிகர் சேஷுவின் மறைவு குறித்து இயக்குனர் கார்த்தி யோகி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.
அதில் அவர், வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் பரதநாட்டியம் எடுக்குப்போது அவருக்கு 45 வயது தான் என்று நினைத்தேன், ஆனால் மருத்துவமனையில் இருக்கும் போது தான் அவருக்கு 60 வயது என தெரியும்.
பரதநாட்டியம் வீடியோ ஒரு மில்லியன் போய்விட்டது, செம வைரல் ஆகிடுச்சு சந்தோசமாக இருக்கு என்று சொன்னார். எல்லோருக்கும் ஓடிப்போய் உதவிய சேஷு அவர்களின் உயிரை காப்பாற்ற ரூ. 10 லட்சும் இல்லாமல் போனது வருத்தமாக உள்ளது என பேசியுள்ளார். சினிமாவில் இவ்வளவு வருடம் இருந்தும் கூட இவருக்கு பத்துலட்சம் உதவி செய்ய போதிய வட்டாரம் இல்லை என சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் புலம்புகிறார்கள்.