ஈஸ்டர் தாக்குதல் சர்ச்சை கருத்து : நீதிமன்றில் விளக்கமளிக்க மைத்திரிக்கு உத்தரவு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சி.ஐ.டி.க்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் 04ஆம் திகதி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில், குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் உண்மைகளை அறிக்கையிட்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை உண்மையாக செய்தவர்கள் யார் என்பது தொடர்பில் தனக்குத் தெரியுமென, முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து சர்ச்சைக்குள்ளானது.

 குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, CID யினர் இது தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் வழங்குமாறு கடந்த சனிக்கிழமை அழைப்பு விடுத்த நிலையில்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (P)


Related Posts