இயக்குனர் பாலசந்தரால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் விவேக். இவருக்கு நிகரான ஒரு காமெடி நடிகரை இனி தமிழ் சினிமாவில் பார்க்க முடியாது. சமூக முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை கூறுவதில் இவருக்கு நிகர் இவரே. ஏனெனில் சமூகத்தில் நடக்கும் பிழைகளை சரியாக கவனித்து ஒரு காமெடி நடிகரால் என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பாக செய்துள்ளார். காமெடியில் சமூகத்துக்கு தேவையான கருத்தை கூறி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். ABJ அப்துல்கலாம் அவர்களின் வார்த்தையை வேத வாக்காக எடுத்துகொண்டு 1 கோடி மரம் நடுவதை தன்னுடைய வாழ்நாள் லட்சியமாக எடுத்துகொண்டு அதற்கான வேலைகளை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் நடிகர் விவேக் கடந்த 2021ம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தற்போது நடிகர் விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு நேற்று அவருடைய தந்தை வாழ்ந்த வீட்டிலேயே எளிமையாக முறையில் திருமணம் நடந்துள்ளது.
தேஜஸ்வினி-சிரஞ்சீவி பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.மேலும் இவர்களின் திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்க விவேக்கின் கொள்கையை ஊக்குவிக்கும் விதமாக மரக்கன்றுகள், மூலிகை பூச்செடிகள் போன்றவை வழங்கப்பட்டது. இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. காரணம் விவேக் மகள் என்பதை தாண்டி விவேக்கின் வார்த்தையை சரியாக பின்பற்றி வருகிறார்கள் என்பதற்காக!
கனடாவில் ராட்சத பாம்பு | வீட்டில் வளர்ப்பு | Thedipaar News