தனுஷ் உடன் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கிறதா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவான திரைப்படம் காதல் கொண்டேன். இப்படத்தில் சோனியா அகர்வால், நாகேஷ், சந்தீப், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நடிகர் சந்தீப். இப்போது இந்த திரைப்படத்தை பார்த்தாலும் கூட சலிக்காது எந்த தலைமுறையும் ரசிக்கும் வண்ணம் இந்த படம் அமைந்திருக்கும். இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பேசப்படக்கூடிய திரைப்படமாக இருக்கும் இப்படத்தில் ஆதி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் சந்தீப். இவர் காதல் கொண்டேன் படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமானார். 

அந்த படத்தில் இவர் விளையாட்டான சாக்லேட் பாயாக நடித்திருப்பார். இப்படத்தை தொடர்ந்து என்னோவோ புடிச்சிருக்கு, காதலே ஜெயம் போன்ற படங்களில் நடித்தார். ஆனால், இதன்பின் எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் இவரை பார்க்க முடியவில்லை. பெங்காலி மொழியில் உருவான சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் சந்தீப்பின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்போது இவர் சினிமாவில் நடிக்கவில்லை.

கனடாவில் ராட்சத பாம்பு | வீட்டில் வளர்ப்பு | Thedipaar News

Related Posts