ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இனவாதம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மீண்டும் மத, இன வேறுபாடுகள் தலைதூக்கலாம் எனவும், 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிகாரத்தைப் பெறுவதற்காக பல்வேறு தரப்பினரும் சமூகத்தை பிளவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இதேவேளை, முஸ்லிம் மற்றும் சிங்கள இனங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தவும், பௌத்த இஸ்லாத்தின் அடிப்படையில் மோதலை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாட்டளி ரணவக்க தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு அருகில் இவ்வாறான அழிவுச் சக்திகள் மீண்டும் செயற்படக் கூடும் எனவும், இவ்வாறான இன, மதப் பிளவுகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு தற்போதைய ஜனாதிபதிக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (P)

நடிகர் டேனியல் பாலாஜி கண்கள் தானம் | Thedipaar News

Related Posts