இறந்த பின்னரும் உதவும் வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். டேனியல் பாலாஜிக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 48 வயதாகும் இவர் சித்தி சீரியல் மூலம் அறிமுகமானார். பொல்லாதவன் படத்தில் நடித்து திரையுலகில் வில்லனாக மிரட்ட துவங்கினார். பின் வேட்டையாடு விளையாடு, வடசென்னை, பைரவா, காக்க காக்க, பிகில் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமாகிவிட்டார். 

இவர் இறந்த செய்தி இணையத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் 44 வயதில் மாரடைப்பால் ஏற்ப்பட்ட மரணம். இவருடைய உடல் தற்போது அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவருடைய உடலுக்கு ஏராளமான பிரபலங்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மற்றவர்களுக்கு உதவும் வகையில் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் டேனியல் பாலாஜி கண்கள் தானம் | Thedipaar News

Related Posts