எந்த நடிகை, நடிகரும் செய்யாத காரியம்! செய்ய துணிந்த பாலா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜய் டிவியில் கலக்கப்போவது யார் உள்ளிட்ட பல ஷோக்களில் காமெடியனாக கலக்கி ரசிகர்களை ஈர்த்தவர் பாலா. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் நுழைந்த போது, இவரது உடல் தோற்றத்தை பார்த்து கேலி செய்தவர்களே அதிகம். ஆனால் இவரது திறமையை மட்டும் பார்த்து இவருக்கு வாய்ப்பு கொடுத்தது விஜய் டிவி. வாய்ப்பு கொடுத்த விஜய் டிவியை பாலா ஏமாற்றவில்லை, கலக்கப்போவது யார் டைட்டிலை வென்றார் வெட்டுக்கிளி பாலா. இப்போது இவரது அடையாளமே மாறிவிட்டது, வெட்டுக்கிளி பாலா என்ற பெயர் போய், எல்லோருக்கும் உதவும் உயர்ந்த உள்ளம் கொண்ட பாலா என்று உருவாகிவிட்டது. ஏழை குழந்தைகளை படிக்கவைக்கிறார், பல தாய் தந்தை அற்ற குழந்தைகளை தத்தெடுத்து உதவுகிறார், ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுகிறார், பலருக்கு ஆட்டோ, டெம்போ, ஆம்புலன்ஸ் வாங்கிக்கொடுத்து உதவி வருகிறார். 

சமீப காலமாக விஜய் டிவியில் இருந்து அவர் விலகி இருக்கிறார். விரைவில் தொடங்க இருக்கும் குக் வித் கோமாளி 5ம் சீசனிலும் அவர் கலந்துகொள்ளமாட்டார் என்றே தெரிகிறது.பாலா படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அதுவும் அவர் எல்லா பணத்தையும் இப்படியே உதவியாக செய்து கொண்டிருந்தால் வருங்காலத்தில் பிச்சை தான் எடுப்ப என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

 அது ஒருபுறம் இருக்க நடிகர் லாரன்ஸ் உடன் சேர்ந்து, வறுமையில் இருக்கும் பெண்ணுக்கு ஆட்டோவை வாங்கி கொடுத்து இருக்கிறார் பாலா. இந்நிலையில் KPY பாலா தான் ஒரு மருத்துவமனை கட்டி அதில் எல்லோருக்கும் இலவச சிகிச்சை தர போவதாக அறிவித்து இருக்கிறார். தான் உதவி செய்வதை பற்றி பல விதமான விமர்சனங்கள் வந்தாலும், அதை எல்லாம் அவர் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.

நடிகர் டேனியல் பாலாஜி கண்கள் தானம் | Thedipaar News

Related Posts