விபசாரத்தில் ஈடுபட்டால் பொது இடத்தில் கல் எறிந்து கொல்லப்படுவார்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை பொது இடங்களில் கல்லெறிந்து கொல்லும் தண்டனை தொடங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தலிபான்களின் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாடா பேசும் ஆடியோ, அரசு தொலைக்காட்சியில் ஒலிப்பரப்பட்டது. அதில், விபச்சாரத்திற்கான தண்டனையை விரைவில் அமல்படுத்துவோம். 

விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு பொது வெளியில் கசையடி மற்றும் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்படும். காபூலை கைப்பற்றியதுடன் தலிபான்களின் பணி முடிவடையவில்லை. அவர்களின் பணி இப்போதுதான் தொடங்கியுள்ளது  என்றார்.

Related Posts
©   Thedipaar

முட்டைக்கு VAT வரி

©   Thedipaar

RBI-யின் புதிய ரூல்ஸ்!