பிரதமருக்கு சம்பள உயர்வா? வெளியான தகவல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் வருடாந்த சம்பளத் தொகை 400,000 டொலர்களாக உள்ளது. இனி  பிரதமர் ஜஸ்ரின்ட் ட்ரூடோ உள்ளிட்ட அரசியல்வாதிகளின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட உள்ளது. 

பிரதமரின் மொத்தச் சம்பளம் 389200 டொலர்களிலிருந்து 406200 டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த சம்பள அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல எதிர்க்கட்சித் தலைவர் பியோ பொலியேவின் வருடாந்த சம்பளம் 299,900 டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருடாந்த சம்பளம் 8500 டொலர்கள் அதிகரிக்கப்பட்டு வருடாந்த சம்பளம் 203100 டொலர்களாகும். 

கார்பன் வரி அதிகரிக்கப்பட உள்ள நிலையில், மறுபுறத்தில் அரசியல்வாதிகளின் சம்பளங்களும் அதிகரிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts