தேர்தலில் ஜெயித்தால் எல்லோர்க்கும் வெளிநாட்டு சரக்கு - சுயேச்சை வேட்பாளர்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மகாராஷ்டிர மாநில சுயேச்சை எம்.பி வேட்பாளர் வனிதா ராவத் என்பவர் வியப்பூட்டும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த மக்களவை தேர்தலில் எம்.பி.,யாக வெற்றி பெற்றால் ஏழைகளுக்கு வெளிநாட்டு மதுபானம் அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். மானிய விலையில் பீர், விஸ்கி வழங்குவதாகவும், தனக்கு வாக்கு செலுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் பெண் வேட்பாளர் நூதன வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.ஏழைகளுக்கு மது அருந்துவது மட்டுமே ஆடம்பரம், அதனால்தான் அவர்களுக்கு இந்த திட்டம் தேவை என்று விளக்கமளித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் நீங்க மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தால் நீங்க தான் அடுத்த முதல்வர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Posts