ரஜினி கூட நடித்த பெண்களா இவர்கள்? இப்போ எப்படி இருக்காங்க?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் சிவாஜி. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ரேயா, விவேக், சுமன், வடிவுக்கரசி, மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், சாலமன் பாப்பையா நடித்திருப்பார். இவர் ஏற்கனவே பட்டிமன்றத்தில் பெயர் பெற்ற மாமனிதர். இவர் சினிமாவில் நடிக்கிறார் என்றால் இவரை பார்க்காமல் இருக்க முடியுமா? ஆனால் சிவாஜி படத்திற்கு பின்னர் இவரை படங்களில் பார்க்கமுடியவில்லை. இப்படத்தில் சாலமன் பாப்பையா மகள்களாக அங்கவை மற்றும் சங்கவை கதாபாத்திரங்களில் இருவர் நடித்திருப்பார்கள். 

சிவாஜி படத்தில் வரும் அங்கவை சங்கவையின் காட்சி பரவலாக பேசப்பட்டது. ஏனெனில் சாதாரண இந்திய நிறத்தில் உள்ளவர்களை அடர் கருப்பு நிறமாக காட்டியதால் அவர்கள் வரும் காட்சிகள் சர்ச்சைக்கு உள்ளாகின. இந்த நிலையில், அவர்கள் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சிவாஜி படத்தில் நடித்த அங்கவை சங்கவையா இது என புகைப்படத்தை பார்த்து பலரும் ஷாக்காகி வருகிறார்கள்.

Related Posts