பேராதனை பல்கலை மாணவன் ரயிலில் மோதி பலி !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


பேராதனை பல்கலைக்கழக முதுகலைப் பீடத்தின் இறுதியாண்டு மாணவர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

நேற்று (01) மாலை பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபாலமவிற்கு அருகில் ரயில் பாதையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


கண்டியில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த ரயிலில் மாணவர் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தல்பிட்டிய வடக்கு, வாத்துவ பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (P)

கனடா பிரதமரை நம்பியவருக்கு ஏற்பட்ட நிலை | Thedipaar NewsRelated Posts