தோட்ட மக்களுக்கு காணி உரிமையை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


பெருந்தோட்ட மக்களுக்கு இலவச காணி வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2024 வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமைகளை வழங்குவதற்கான யோசனையை நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார்.

இந்த பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்காக, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சும் தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து அமைச்சரவை அல்லாத அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சின் ஆதரவுடன் ஒரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளன.

அந்த வேலைத்திட்டத்தின் கீழ், உள்ளுர் பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் அரச பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்களில் வசிக்கும் 4151 பயனாளிகள் இனங்காணப்பட்டு, அந்தக் காணிகளுக்கு உடனடிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி மற்றும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர் இணைந்து முன்மொழிந்துள்ளனர். (P)

மாலையும் கழுத்துமாய் பிரபல நடிகர்! | Thedipaar News

Related Posts