அண்ணாமலைக்கு இலங்கை தமிழர்கள் கண்டனம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தேர்தல் காய்ச்சல் வந்துவிட்டதால் கச்சத்தீவு விவகாரத்தில் பிதற்றி வருகிறார் என இலங்கை யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகசெல்லத்துரை நற்குணம் கூறுகையில், கச்சத்தீவு இலங்கையின் சொத்து. இந்தியா தாரைவார்த்து தந்துவிட்டது என்கிற அண்ணாமலையின் விமர்சனத்தை கண்டிக்கிறோம். 

அண்ணாமலைக்கு தேர்தல் காய்ச்சல் வந்துவிட்டது. தமிழ்நாட்டு மீனவர்களின் வாக்குகளை குறிவைத்துதான் இப்படி அண்ணாமலை பேசுகிறார்.

1974-ம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை தமிழ் மீனவர்கள் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், கன்னியாகுமரி வரை மீன்பிடித்தோம். இதனை தடுக்கவே ஒப்பந்தங்களைப் போட்டது இந்திய அரசு என்றார்.

Related Posts