பருக்களுக்கு விடைகொடுத்திடும் Himalaya Purifying Neem Face Wash மீள அறிமுகம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மூலிகை மற்றும் ஆயுர்வேத மூலப்பொருட்களின் வலுவான இருப்பைக் கொண்ட உடல்நலம் மற்றும் அழகு சாதனப் பொருட்களில் நிபுணத்துவம் பெற்ற உலகின் மிகப்பெரிய நுகர்வோர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹிமாலயா வெல்னஸ் நிறுவனம், இலங்கையில் ஹிமாலயா பியுரிஃபைங் நீம் ஃபேஸ் வோஷ் மீண்டும் அறிமுகப்படுத்துவதாக சமீபத்தில் அறிவித்துள்ளது. – 50 மில்லிலீற்றர் மற்றும் 100 மில்லிலீற்றர் பொதிகள் என தயாரிப்பு இரண்டு அளவுகளில் கிடைக்கிறது. இது வேம்பு மற்றும் மஞ்சள் கலவையின் செயற்திறன்மிக்க உட்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது அத்தோடு வலுவான உள்ளார்ந்த பக்டீரியாவை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது 99.9% பருக்களை உருவாக்கும் பக்டீரியாவைக் அழித்து, பயன்படுத்திய முதல் நாளிலிருந்தே பருக்கள் வருவதை தடுத்திட உறுதியளிக்கிறது.

தயாரிப்பானது, ஏனைய சகல சந்தைகளிலும் நுகர்வோரால் விரும்பப்பட்டு ஒரு தனித்துவமான வெற்றியினை தனதாக்கியுள்ளது. அண்டைய நாடான இந்தியாவில் இது ஆரம்பிக்கப்பட்டது. இது இலங்கையைப் போன்ற வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை நிலைமைகளைக் கொண்டுள்ளது. ஈரப்பதம் எண்ணெய் சரும நிலையைத் தூண்டுகிறது, இது அழுக்கு குவிந்து பருக்கள் உருவாக வழிவகுக்கிறது. ஹிமாலயா பியுரிஃபைங் நீம் ஃபேஸ் வோஷ் இன் வழக்கமான பயன்பாடு பருக்களை தடுக்கும் மற்றும் பயன்படுத்துவோருக்கு நான்கு முக்கிய பராமரிப்பு காரணிகளை உறுதி செய்கிறது. தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கு முன்பே பருக்கள் இருந்தால், இது பருக் குறிகளைத் தடுக்கும். இது சரியான PH சமநிலையைக் கொண்டுள்ளது, சருமத்தை மென்மையாகவும், ஊட்டச்சத்துடனும் வைத்திருக்கிறது மற்றும் அழுக்குகளை ஈர்க்கும் மற்றும் பருக்கள் உருவாவதைத் தூண்டும் எண்ணெய் திரட்சியிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. ஹிமாலயா பியுரிஃபைங் நீம் ஃபேஸ் வோஷ் தனியுரிம ஆயுர்வேத சூத்திரங்கள் மற்றும் ஆயுர்வேதத்தின் நலச்செழுமைகளால்; செறிவூட்டப்பட்டுள்ளது. சந்தையில் உள்ள ஏனைய அனைத்து போட்டி தயாரிப்புகளையும் விட இது தனித்த வேறுபாட்டுடன் தனித்துவமான தயாரிப்பு வலிமையைக் கொண்டுள்ளது.

ஹிமாலயா பியுரிஃபைங் நீம் ஃபேஸ் வோஷ் இலங்கையில் பிரத்தியேகமாக C.W.Mackie PLC இன் Scan தயாரிப்பு பிரிவால் விநியோகிக்கப்படுகிறது. இலங்கையில் தயாரிப்பு மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு, இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான ஹிமாலயா வெல்னஸ் கம்பனியின் நாட்டு முகாமையாளர் ரவி குமார் ஜி கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் நுகர்வோருக்கு ஹிமாலயாவின் வெற்றிகரமான தயாரிப்புகளை வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அடைகின்றோம். தயாரிப்பானதுஇ இந்த அழகிய நாட்டின் நுகர்வோருக்கு தர உத்தரவாதம், சீராக கிடைக்கும் தன்மை மற்றும் விலை வசதியை உறுதி செய்யும் வகையில், தயாரிப்பு தரங்களுக்கு சமரசம் செய்யாத இணக்கத்துடன், உயர் உலக தரத்துடன் இலங்கையில் தயாரிக்கப்படுவதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஹிமாலயா நிறுவனம், 1930 இல் தொடங்கப்பட்டதில் இருந்து, நுகர்வோரின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் செயற்பாடுகளில் எப்போதும் அதிக கவனம் செலுத்துகிறது. இமயமலை சுத்திகரிப்பு வேப்பம்பின் நன்மை மற்றும் உண்மைத்தன்மையை நன்கு அறிந்த, ஆரோக்கியத்தில் அக்கறையுள்ள நுகர்வோர் புரிந்துகொள்வார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” என தனது கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார்.

C.W.Mackie PLC இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹிமாலயா வெல்னஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ விநியோகஸ்தர் திரு. மங்கள பெரேரா மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இப்போது இலங்கையை தளமாகக் கொண்ட உற்பத்தி, வலுவூட்டப்பட்ட விநியோகம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு தரத்துடன், நாங்கள் நம்பிக்கையுடன் உற்பத்தியின் வெற்றி பயணத்தில் புதிய மைல்கல்லைக் காண்கிறோம்.” எனக் கூறினார்.

ஹிமாலயா வெல்னஸ் நிறுவனம் பற்றி
1999 இல், ஹிமாலயா தனது தனிப்பட்ட பராமரிப்பு வணிகத்தை “ஆயுர்வேத கான்செப்ட்ஸ்” என்ற வியாபரக்குறியின்; கீழ் தொடங்கினர் மற்றும் 2003 இல் “ஹிமாலயா ஹெர்பல் ஹெல்த்கேயா” என மீண்டும் தொடங்கப்பட்டது. வாய்வழி பராமரிப்பு, தலைமுடி பராமரிப்பு, தோல் பராமரிப்பு, உதடு பராமரிப்பு, முக பராமரிப்பு மற்றும் சரும பராமரிப்பு என தனிநபர் பராமரிப்பு வணிகமானது 6 முக்கிய வகைகளின் கீழ் செயல்படுகிறது .

ஒவ்வொரு வீட்டிற்கும் ஆரோக்கியத்தையும், ஒவ்வொரு இதயத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவது மற்றும் மக்களின் முதல் கலாசாரத்தின் சாரத்தை வளர்ப்பது என்ற பார்வையுடன், நிறுவனத்தின் இலட்சியம் உலகெங்கிலும் உள்ள சர்வதேச வர்த்தகச் சந்தைகளுக்கு சேவை வழங்கவும் முனைந்தது. ஹிமாலயா தயாரிப்புகள் தற்போது 116 இற்கும் மேற்பட்ட நாடுகளில் 750 இற்கும் மேற்பட்ட தயாரிப்புகளுடன் தனிப்பட்ட பராமரிப்பு, மருந்து மற்றும் ஆரோக்கியம், தாய் மற்றும் சேய் பராமரிப்பு மற்றும் விலங்கு சுகாதார தயாரிப்பு என தயாரிப்பு வரிசைகள் விரிவடைந்து காணப்படுகின்றது. ஆசியா பசுபிக் பிராந்தியத்தில் முதல் ஹிமாலயா தயாரிப்புகள் 1995 இல் தொடங்கப்பட்டன. இன்று சிங்கப்பூர்,மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து, கம்போடியா மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளில் நிறுவனம் அதன் APAC அலுவலகங்கள் மற்றும் குழுக்களைக் கொண்டுள்ளது. (R)

மேலதிக தகவல்களுக்கு: www.himalayawellness.com



Related Posts