எல்லாம் சின்ன பசங்க: வணிக வளாகம் அருகே துப்பாக்கி சூடு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் நேற்று நள்ளிரவில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள வணிக வளாகத்திற்கு வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது. 

துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு, ரோந்து போலீசார் அங்கு விரைந்தனர். அதற்குள் துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் 7 இளைஞர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களின் வயது 12 முதல் 17 வயது வரை இருக்கும் என்றும் பெருநகர காவல்துறை துணை தலைவர் தான்யா டெர்ரி தெரிவித்தார்.

தாக்குதலுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. தாக்குதல் தொடர்பாக இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை என பொலீசார் கூறினர். 

Related Posts