பிரபல நடிகர் விஸ்வேஷ்வர ராவ் இன்று காலமானார்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிதாமகன், உன்னை நினைத்து போன்ற பல படங்களில் நடித்து இருந்தவர் காமெடி நடிகர் விஸ்வேஷ்வர ராவ். அவர் தமிழ், தெலுங்கு என மொத்தம் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். சினிமா வட்டாரத்தில் ,மிகவும் பிரபலமான நடிகர். குழந்தை நட்சத்திரம், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் என ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார் விஸ்வேஷ்வர ராவ். தற்போது 62 வயதாகும் அவர் சென்னை சிறுசேரி பகுதியில் இருக்கும் அவரது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை விஸ்வேஷ்வர ராவ் உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் சினிமா துறையினர் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. 

பெரும்பாலும் நம் மக்கள் கதாநாயகன், கதாநாயகி, பிரபலமான காமெடி நடிகர் என இவர்களது இறப்பு மட்டும் தான் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. குணசித்திர நடிகர்களின் இறப்பாக இருக்கட்டும் இறுதி காலமாக இருக்கட்டும் அதனை மக்களும் கண்டுகொள்வதில்லை, சினிமா துறையும் கண்டுகொள்வதில்லை. 

சினிமாவில் பிரபலமான எத்தனை குணசித்திர நடிகர்கள் தங்களது மருத்துவ செலவிற்காக சினிமா பிரபலங்களின் ஆதரவை கேட்டு வீடியோ போடுவதை நாம் பார்த்திருப்போம். கோடியில் சம்பாதிக்கும் முன்னணி பிரபலங்களே உதவ முன்வராத போது, சினிமாவை மட்டுமே வாழும் சின்ன சின்ன நடிகர்கள் எந்த தைரியத்தில் சினிமாவை நம்பி இறங்குவார்கள்? சினிமாவில் குணசித்திர நடிகராக நடிக்க போனால் நாமும் இறுதி காலத்தில் கஷ்டப்படுவோம் என்றே பலர் சினிமா ஆசையை தியாகம் செய்து விடுகிறார்கள். நடிகர் சேஷ் தனது மருத்துவ செலவிற்கு பத்துலட்சம் இல்லாமல் கடந்த வாரம் இறந்து போனதை கேள்விப்பட்டிருப்பீர்கள். நடிகர் சேஷன்

Related Posts