கணவரை பிரிந்த துக்கத்தில் ஆன்மீகத்தில் மூழ்கிய ரஜினி மகள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை காதல் திருமணம் செய்த நிலையில் 2022ல் திடீரென விவாகரத்தை அறிவித்தனர். 18 வருடம் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் திடீரென பிரிந்தது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்ன காரணத்திற்காக பிரிந்தார்கள் என்பது, இப்போது வரை சிதம்பர ரகசியமாகத்தான் உள்ளது. ஐஸ்வர்யா விவாகரத்துக்கு பின் இயக்கிய லால் சலாம் படம் இந்த வருட தொடக்கத்தில் ரிலீஸ் ஆனது. ஆனால் அதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முழுமையாக ஆன்மீகத்தில் மூழ்கி இருக்கிறார். 

அவர் ஓம் நமச்சிவாய என பேப்பரில் பல நூறு முறை எழுதி இருக்கிறார். அதை அவரே இஸ்ட்டாக்ராமில் வெளியிட்டு இருக்கிறார். கணவரை பிரிந்த துக்கத்தில் ஆன்மீகத்தில் மூழ்கி விட்டீர்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். தனக்கு விவாகரத்து ஆனது முதல் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ளார் ஐஸ்வர்யா. கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார், அடுத்தடுத்து படங்கள் இயக்குகிறார், இப்போது ஆன்மீகத்தில் இறங்கியுள்ளார். ஆனால் தனுஷ் பக்கமோ எந்த ஒரு மாறுதலும் இல்லை, எப்போதும் போல இயல்பாக சினிமாவில் பிசியாக உள்ளார்.

Related Posts