நடிகை சரண்யா பக்கத்து வீட்டு பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்தாரா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் அம்மா ரோல் என்றாலே அதற்கு பொருத்தமான நடிகை சரண்யா பொன்வண்ணன் தான். விஜய், தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன் என பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். அம்மா என்றால் அப்படியே அச்சு அசல் மிடில் கிளாஸ் அம்மா போலவே சரியாக பொருந்தி இருப்பார். நடிகை சரண்யா, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பக்கத்து வீட்டு பெண் போலீசில் புகார் அளித்து இருந்தார். சினிமா துறை முழுக்க இந்த பேச்சு தான். ஆனால் இது பொய்யான புகார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சரண்யா பொன்வண்ணன் வீட்டுக்கு உறவினர் ஒருவர் வந்துள்ளார். அவரது கார் மீது பக்கத்து வீட்டுகாரர் கேட் திறந்து இடித்து இருக்கிறார். இது தொடர்பாக அந்த வீட்டினருக்கும் சரண்யா பொன்வண்ணன் உறவினருக்கும் சண்டை நடந்து இருக்கிறது. ஒரு கட்டத்தில் நடிகை சரண்யாவின் உறவினரை அந்த பக்கத்து வீட்டு பெண், வாடா போடா.. அப்படி தாண்டா இடிப்போம் என தகாத வகையில் பேசி இருக்கிறார். சத்தம் கேட்டு பொன்வண்ணன் மற்றும் சரண்யா இருவரும் வெளியில் வந்து, தங்கள் உறவினரை வீட்டுக்குள் கூட்டி சென்றிருக்கின்றனர்.

 அந்த சிசிடிவி காட்சியை தான் சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி போலீசில் கொடுத்து இருக்கின்றனர். போலீஸ் சரண்யா தரப்பை அழைத்து விசாரித்தபோது தான் உண்மை தெரியவந்திருக்கிறது.மேலும் பக்கத்து வீட்டு பெண் பொய் புகார் அளித்ததால் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர். பல பக்கத்து வீட்டு மக்கள் இப்படித்தான் உள்ளார்கள், மற்றவர்களது வளர்ச்சியை தாங்க முடியாமல் போனவர் வந்தவர்கள் மீது கோபத்தை காட்டி கொண்டு இருப்பார்கள். அப்படித்தான் நடிகை சரண்யா வீட்டிலும் நடந்துள்ளது.

Related Posts