யாழ். சர்வதேச விமான நிலையத்தை தனியாருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யாழ். சர்வதேச விமான நிலையத்தை தனியாருக்கு வாடகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்த பின்னர் மேலதிக பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மத்தள விமான நிலையத்தின் செயற்பாடுகளை இந்தியா மற்றும் ரஷ்யாவில் உள்ள இரண்டு நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான பிரேரணை நிதி அமைச்சின் அவதானத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். (P)


Related Posts