“எப்படி இந்தியா சென்றீர்கள்..?” இலங்கை வந்த முருகன், ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமாரிடம் விசாரணை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்து விடுதலையான முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் இன்று (03.04) நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளது.

இலங்கை வந்த இவர்களிடம் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைகள் முடிந்த நிலையில், தற்போது குற்றுப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இதன்போது எவ்வாறு இந்தியா சென்றார்கள் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த விசாரணைகள் பல மணிநேரங்களாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (P)


Related Posts