விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் லொள்ளு சபா. அதில் நடித்த சந்தானம் இப்போது சினிமாவில் கலக்கி வருகிறார். காமெடியனாக நடித்தவர் இப்போது ஹீரோவாக நடிக்கும் வரை முன்னேறியுள்ளார், அதுமட்டுமா? ஆரம்பத்தில் இருந்து தன்னுடன் நடித்த துணை நடிகர்களை விடாமல் இன்னும் தன்னுடனே, தான் நடிக்கும் படங்களில் நடிக்க வைக்கிறார். அப்படித்தான் லொள்ளு சபாவில் நடித்த ஆண்டனி, சில படங்களில் நடித்திருந்த நிலையில் திடிரென வெள்ளித்திரை, சின்னத்திரையில் இருந்து காணாமல் போனார்
. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஆண்டனி, சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று இருந்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய மனைவிக்கு என் மீது வெறுப்பு ஏற்பட்டது. அதனால் நானும் என் மனைவியும் பிரிந்து தான் வாழ்கிறோம். என்னுடைய தீய நண்பர்களால் என் பணம், வீடு எல்லாமே என்னை விட்டு சென்றது. ஆனால் கஷ்டத்தில் இருக்கும் போது சந்தானம் தான் உதவி செய்தார் என்று லொள்ளு சபா ஆண்டனி கூறியுள்ளார். ஆனால் இவரது இப்போதைய பேட்டிகளை பார்த்த மக்கள், அப்படி இருந்த நடிகரா இப்போது இப்படி இருக்கிறார் என ஆச்சர்யமாக பார்த்து வருகிறார்கள். காரணம் இவரது நலிவடைந்த தோற்றம் தான்.