தனுஷிற்கும் ஜிவி பிரகாஷிற்கும் சண்டையா? என்ன ஆனது?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜிவி பிரகாஷ் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார் , இப்போது பல படங்களில் நடித்து ஹீரோவாக நடித்து வருகிறார். இவரை இசையமைப்பாளராக ஏற்றுக்கொண்ட இவரது ரசிகர்கள் இவரை ஹீரோவாக ஏற்றுகொள்ள தயங்குகிறார்கள். காரணம் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. தற்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கள்வன் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்தப்படம் இவரது சினிமா பயணத்தில் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில் தனியார் யூ ட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி ஜிவி பிரகாஷ், தனுஷுடன் ஏற்பட்ட மோதல் பற்றி பேசியிருக்கிறார். அதில் அவர் , இரண்டு நண்பர்கள் இருக்கும்போது சண்டை வருவது எல்லாம் சகஜம் தான். அந்த மாதிரி எனக்கும் தனுஷுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதனால் நாங்கள் ஆறு வருடம் பேசிக்கொள்ளவில்லை. இப்போ நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என்று ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். முன்னர் தனுஷுக்கும் சிம்புவிற்கும் சண்டை என்றார்கள் ஆனால் இருவரும் மேடைகளில் கட்டிப்பிடித்துக்கொண்டு பேசுகிறார்கள். அதுபோல் தான் ஜிவி பிரகாஷிற்கும் தனுஷிற்கும் இடையே சண்டை ஏற்ப்பட்டு இப்போது இருவரும் ஒன்றாகிவிட்டார்கள்.

Related Posts