கல்வி அமைச்சின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்: வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முன்னெடுப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ, இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயர் தரத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடத்தை கற்பதாக கூறும் மாணவர் ஒருவரினால் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் காணப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை வெளிப்படுத்துவதற்காகவே, இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (P)


Related Posts