கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 15 வெளிநாட்டவர்கள்; நாடு கடத்த நடவடிக்கை !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்து ஒன்லைன் வேலைகளில் ஈடுபட்டு வந்த 15 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் குடிவரவு திணைக்களத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 11 பேர் இந்திய மற்றும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாகும்.

குறித்த 11 காலாவதியான விசாவுடன் இலங்கையில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தவிர இவர்களில் எஞ்சிய 04 பேர் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வேலையில் ஈடுபட்டுள்ளவர்களாகும்.

கைது செய்யப்பட்டுள்ள 11 வெளிநாட்டவர்களும் மிரிஹான தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் அவர்கள் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். (P)


Related Posts