விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2வில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தவர் தான் பவித்ரா லட்சுமி. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்னர் வரை குரூப் டான்ஸ் ஆடுவது, குறும்படங்களில் நடிப்பது என தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி வந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் தான் கதாநாயகி ஆகும் அளவிற்கு உயர்ந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பவித்ரா, நான் நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடுவதற்கு காரணம் சம்பளம் கிடையாது. அந்த நிகழ்ச்சி மூலமாக ஒரு அங்கீகாரம் கிடைத்து விடாதா? என்பதற்காக மட்டும் தான். ஆனால் சிலர், நீ காசு கொடுத்த என்ன என்ன வேணாலும் பண்ணுவியா? எங்க வேணாலும் போவியா என்று பேசுகிறார்கள்.
அப்படி சொல்லும் போது வேதனையாக இருக்கிறது. நிகழ்ச்சியில் அவ்ளோ சம்பளம் கிடைக்காது. 8 மணி நேரம் ஆடினால் 500 ரூபாய் கிடைக்கும். சம்பளத்தை தாண்டி அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதற்காக நிகழ்ச்சியில் நடனமாடினேன் என்று பவித்ரா கூறியுள்ளார். பெரும்பாலான முன்னேற போராடும் நடிகர் நடிகைகள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பு சின்னதாக இருந்தாலும் கூட பயன்படுத்தி கொள்ள போராடுவார்கள். அதுமட்டுமா? சோசியல் மீடியாவில் கூட தங்களது நடனம் மற்றும் நடிப்பை வெளிப்படுத்துவார்கள். ஆனால் சில நெட்டிசன்கள் தவறாக பேசி அவர்களது முயற்சியை அசிங்கப்படுத்தி விடுகிறார்கள்.