நடிகர் முரளி, தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய முக்கிய நடிகர்களில் ஒருவர். இவர் கன்னட திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான சித்தலிங்கையாவின் மகன் ஆவார். முரளிக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஏராளம். கருப்பாக இருந்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என்ற முறையை மாற்றி அமைத்தவர்கள் லிஸ்டில் ரஜினி, விஜயகாந்த், முரளி முக்கியமானவர்கள்.
முரளிக்கு 3 பிள்ளைகள், காவ்யா, அதர்வா மற்றும் ஆகாஷ். இதில் அதர்வா சினிமாவில் நடிகராக கலக்கி வந்தார், 3வது மகன் ஆகாஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சினேகா பிரிட்டோ என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
முரளியின் மூத்த மகள் காவ்யா டாக்டராக பணியாற்றி வருகிறார். சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை நிபுணராக இருந்து வருகிறார். அவருக்கு 2011ம் ஆண்டில் திருமணமானது. முரளிக்கு மகன்கள் மட்டுமே உள்ளதாக பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மகள் இருக்கும் செய்தி இப்போது தான் வைரலாகி வருகிறது.
Font size:
Print
Related Posts