எளிமையாக சீமந்தம் நடத்திக்கொண்ட நடிகை அமலாபால்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நீலத்தாமரா எனும் மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். அப்படத்தை தொடர்ந்து தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவருக்கு மைனா படம் பெரிய ரீச் கொடுத்தது. அந்த படம் மாமனார் உடன் ஏற்படும் தவறான உறவு பற்றி கூறும் கதைக்களம். தவறான காதலால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது பற்றி சிந்து சமவெளி படம் விவரமாக கூறி இருக்கும். இந்த படத்தில் தவறான பழக்கத்திற்கு உள்ளாகும் மருமகள் கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்திருப்பார். என்னதான் நெகட்டிவ் கதாபாத்திரமாக இருந்தாலும் கூட சிறப்பாக துணிச்சலாக நடித்திருப்பார். பெரும்பாலான ஹீரோயின்களுக்கு எதிர்மறையான கதா பாத்திரத்திற்கு பின்னர் சரியாக வாய்ப்பு கிடைக்காது. ஆனால் அமலாபாலுக்கோ வாய்ப்புகள் குவிந்தது. தெய்வத்திருமகள், தலைவா என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். 

தலைவா படத்தின் போது இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் காதல் ஏற்பட திருமணம் செய்துகொண்டார்கள், பின் சில பிரச்சனையால் விவாகரத்து பெற்றார்கள். நடிகை அமலாபால் கடந்த வருடம் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கும் அமலாபாலுக்கு மிகவும் சிம்பிளான முறையில் சீமந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரே வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Related Posts
©   Thedipaar

முட்டைக்கு VAT வரி

©   Thedipaar

RBI-யின் புதிய ரூல்ஸ்!