2 ரொறன்ரோ காவல்துறை அதிகாரிகளுக்கு காயம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இரண்டு ரொறன்ரோ காவல்துறை அதிகாரிகள் திங்கட்கிழமை வெவ்வேறு சம்பவங்களில் காயமடைந்தனர். ஒருவர் திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் North York நகரில் காயமடைந்தார். 

ஐந்து ஆண்கள் வாகனம் ஒன்றை திருட முயற்சிப்பதாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரி அந்தப் பகுதிக்குச் சென்றார். சந்தேக நபர்களை கைது செய்ய முயன்ற போது அதிகாரி காயமடைந்தார். 

இந்த சம்பவத்தில் இரண்டு ஆண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மூன்று சந்தேக நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர். அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் நிகழ்ந்த ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் மற்றொரு Toronto காவல்துறை அதிகாரி காயமடைந்த சம்பவம் நிகழ்ந்தது. காவல்துறை அதிகாரியை நபர் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காவல்துறை அதிகாரி காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவத்தில் ஒரு சந்தேக நபர் கைதானார்.

கனடாவில் துப்பாக்கி சூடு | Thedipaar News

Related Posts