அமெரிக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட கனடிய விமானம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

Air Canada விமான சேவைக்கு சொந்தமான போயிங் 737 மெக்ஸ் ரக விமானமொன்று  அமெரிக்காவின் இடோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்திலிருந்து எச்சரிக்கை ஒளி வெளியானதன் காரணமாக இவ்வாறு விமானி, விமனத்தை அவசரமாக தரையிறக்கியுள்ளார்.

மெக்ஸிக்கோவிலிருந்து வான்கூவார் நோக்கிப் பயணம் செய்த விமானம் எச்சரிக்கை ஒளி விளக்கு ஒளிர்ந்த காரணத்தினால் இடோவின் போய்ஸி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 122 பயணிகளும், 6 விமானப் பணியாளர்களும் பயணம் செய்துள்ளனர்.

அவசரமாக தரையிறக்கப்பட்ட போதிலும் விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு காயங்கள் ஏற்படவில்லை எனவும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் துப்பாக்கி சூடு | Thedipaar News

Related Posts