பிழையாக வீட்டு வரி அறவீடு? ரொறன்ரோவில் 55000 முறைப்பாடுகள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வீடுகளை காலியாக வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது வரி விதிக்கப்படும் நடைமுறை உள்ளது. இதன்படி ரொறன்ரோவில் வீட்டு வரி தொடர்பில் 55000 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நகரில் நிலவி வரும் வீட்டுத் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு, காலியாக வைத்திருக்கப்படும் வீடுகள் மீது வரி அறவீடு செய்யப்படுகின்றது. 

கடந்த மார்ச் மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக வீடு பற்றிய தகவல்களை உரிய முறையில் ஆவணப்படுத்தியிருந்தால் அவர்கள் மீது தாமதக் கட்டணம் அறவீடு செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 நகராட்சி நிர்வாகத்திடம் 55000 வீட்டு உரிமையாளர்கள் பிழையாக வரி அறவீடு செய்வதற்கான அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் துப்பாக்கி சூடு | Thedipaar News

Related Posts
©   Thedipaar

யாழில் வாள்வெட்டு