சினிமாவில் நடிகைக்கு ஏற்பட்ட உருவகேலி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை அபிராமி. அதற்கு முன்னதாக இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் கூட இந்த படம் தான் இவருக்கு அடையாளத்தை தேடி தந்த படம். அபிராமி தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்திருக்கிறார். தற்போது இவர் சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சினிமா துறையில் நடிகைகள் உருவக்கேலியை எதிர்கொள்வது போன்ற கசப்பான அனுபவம் அபிராமிக்கும் ஏற்பட்டு உள்ளது. 

இதுகுறித்து அபிராமி கூறும்போது, உடல்ரீதியாக விமர்சனங்களை எதிர்கொண்டேன். என்னுடைய உயரத்தை வைத்து கேலி செய்து இருக்கிறார்கள். அதே போல என்னுடைய தாடையும் கொஞ்சம் நீளமாக இருக்கும், அதையும் சிலர் கிண்டல் அடித்திருக்கிறார்கள். சினிமாவிலிலும் இது உண்டு என்று அபிராமி கூறியுள்ளார். சினிமாவில் மட்டுமா உருவகேலி? வீடு, அலுவலகம், பள்ளி, கல்லூரி என எங்கு சென்றாலும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உருவகேலி நடந்துகொண்டு தான் உள்ளது.


Related Posts