ரஜினி மீது கோவத்தில் உள்ள மீனா! ஏன்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் என்றாலே வெற்றி தான். அவரது சினிமா பயணத்தில் முக்கியமான படங்களில் ஒன்று தான் படையப்பா.இப்படம் வெளிவந்து 25 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த நிலையில், மாபெரும் வெற்றியடைந்த படையப்பா படத்தின் கதையை, நடிகை மீனாவிடம் ஒரு முறை கூறியுள்ளாராம் ரஜினிகாந்த். ஏன் நடிகையிடம் கதை பற்றி கூறவேண்டும் என்று தானே யோசிக்கிறீங்க? ஏனெனில் மீனாவிற்கு நல்ல ஸ்டோரி சென்ஸ் இருக்கிறது என்ற காரணத்தினால் இப்படி செய்துள்ளார். கதையை கேட்ட நடிகை மீனா நான் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என கூறினாராம். ஆனால், ரஜினிகாந்த் அது வில்லி கதாபாத்திரம், உங்க இன்னசண்ட் முகத்திற்கு செட் ஆகாது மீனா. நீங்க வேணும்னா கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிங்க என கூறிவிட்டாராம். ரஜினிகாந்த் சொல்லியும் கேட்காமல் நீலாம்பரி கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என அடம்பிடித்துள்ளாராம். 

அந்த கதாபாத்திரம் தனக்கு கொடுக்கவில்லை என, என் மீது இன்று வரை மீனாவிற்கு கோபம் இருக்கிறது என்று விழா மேடை ஒன்றில் ரஜினிகாந்த் பேசியுள்ளார். உண்மையில் ரஜினி சொன்ன விஷயம் நிதர்சனம் தானே? ரம்யா கிருஷ்ணனை தவிர வேறு யார் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும் அது சொல்லிக்கொள்ளும்படி அமைந்திருக்காது. அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே நீலாம்பரி தான் அந்த கதாபாத்திரத்தையே சொதப்பிவிட்டால் படம் என்னவாகும்?


Related Posts