பயண எச்சரிக்கையை மீறி Air Canada விமான சேவை ஆரம்பம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இஸ்ரேலுக்கான விமான பயணங்களை மீண்டும் தொடங்க உள்ளதாக Air Canada நிறுவனம் அறிவித்துள்ளது. ஹமாஸ் இயக்கத்துடனான போர் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டது.

இப்போது மீண்டும் Air Canada  விமான சேவை நிறுவனம் இஸ்ரேலுக்கான விமான பயணங்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 9ம் திகதி ரொன்றோவிற்கும் தெல் அவீவிற்கும் இடையிலான விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் விமான போக்குவரத்து தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது.

எவ்வாறெனினும் இஸ்ரேலுக்கான பயணங்கள் தொடர்பில் கனடிய அரசாங்கம் பயண எச்சரிக்கையை இதுவரையில் தளர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts