வீட்டின் கூரையில் இருந்த துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் ! கொழும்பில் மூவர் கைது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கொழும்பு, மருதானை பகுதியில் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த டீ – 56 ரக துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்களுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டின் கூரையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த டி 56 ரக தானியங்கி துப்பாக்கி,

14 தோட்டக்களுடனான மகசின் மற்றும் கூரிய ஆயுதங்கள் சிலவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மருதானை பகுதியைச் சேர்ந்த 18 , 34 மற்றும் 47 வயதுடைய சந்தேக நபர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். (P)

இலங்கையில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவிப்பு | Thedipaar News


Related Posts