கனடிய தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சிரியாவில் உள்ள இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கனடிய தூதரகம் சேதமடைந்துள்ளது. கனடிய தூதரகத்தின் முழுமையான சேத நிலை குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. சிரிய உள்நாட்டுப் போர் மோசமடைந்ததால் 2012ல் கனடிய தூதரகம் செயல்பாடுகளை நிறுத்தியது. ஏற்கனவே கனடாவின் தூதரக கட்டிடம் ஏப்ரல்1ல் நடந்த வான் தாக்குதலில் சேதம் அடைந்தது என கனடிய வெளிவிவகார அமைச்சின் தகவல் ஒன்று குறிப்பிடுகிறது.

இந்த வான் தாக்குதல் குறித்து கனடா முன்கூட்டியே எச்சரிக்கப்பட வில்லை என கனடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly புதன்கிழமை கூறினார். தூதரகம் மூடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய அமைச்சர் தூதரகம் சேதமடைந்ததையும் ஏற்றுக் கொண்டார். ஆனாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக மேலதிக விவரங்களை வெளியிட முடியாது என அவர் கூறினார். தூதரக கட்டிடம் கனடா அரசாங்கத்தின் சொத்தாகவே உள்ளது என கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

Related Posts