பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


தொலைதூரப் பஸ்கள் அல்லது புகையிரதங்களில் பயணிப்பவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பொலிஸார் அவசர எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

நீண்ட தூர பயணிகளின் பெறுமதியான பொருட்களை கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் சாதாரண பயணிகளைப் போல நீண்ட தூரப் பேருந்துகளில் ஏறி பயணிகளின் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து வருகின்றனர்.

எனவே, பயணிகள், பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பதுளை – கொழும்பு தொலைதூரப் பேருந்துகளில் இந்த திருட்டுச் சம்பவங்கள் அதிகம் இடம்பெறுவதாகவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பொலிஸார் மற்றும் ஆயுதப்படைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. (P)

விடுதிகள், வீடுகளாக கருதப்படும்! | Thedipaar News

Related Posts